என்னது இன்னொரு நிர்மலா தேவியா?

ஏப்ரல் 20, 2018 1207

கன்னியாகுமரி (20 ஏப் 2018) : கன்னியா குமரியில் பள்ளி ஆசிரியர் மாணவி ஒருவருடன் தலைமறைவாகியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி, மகள்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரிடம் டியூஷன் படிக்கும் மாணவிகளிடம் செல்ஃபோனில் ஆபாச படங்களை காட்டி வலையில் விழ வைக்க முயற்சி செய்துள்ளார். இதில் ஒரு +2 மாணவி ஆசிரியரின் வலையில் வீழ்ந்தார். இருவரும் கடந்த 10 ஆம் தேதி தலைமறைவானார்கள்.

மாணவி காணாமல் போனது பற்றி பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கரிமேடு காவல்துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே ராஜேஸ்வரன் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியதாக கூறப் படுகிறது.

நிர்மலா தேவி என்ற பேராசிரியை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆசிரியர் ஒருவ மாணவியுடன் தப்பியோடிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...