பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் - இதஜ கோரிக்கை!

ஏப்ரல் 21, 2018 537

சென்னை (21 ஏப் 2018): காஷ்மீர் கத்துவா மற்றும் உபி யில் வன்புணர்வு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தூக்கில் இட வேண்டும் என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை வைத்துள்ளது.

காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் இந்துத்துவா கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலையான சிறுமி ஆசிபாவுக்கும், உ.பி.யில் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கும் நீதி கேட்டும்,பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தியும்,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று 20.04.18 மாலை 5 மணியளவில் பல்லாவரம் பஸ்நிலையம் அருகில் மாபெரும் நீதி கேட்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார்.சமூக ஆர்வலர்கள் சுந்தரவள்ளி,டி.எஸ்.எஸ்.மணி மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் உள்பட பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...