எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு!

ஏப்ரல் 21, 2018 662

சென்னை (21 ஏப் 2018): நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெண் பத்திரிகையாளர்கள் மீது மிகவும் மோசமான வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவருடைய பதிவுக்கு மன்னிப்பு கோரியும் பத்திரிகையாளர்கள் விடுவதாக இல்லை. இதுபோன்று இவர் பதிவிடுவது முதல் முறையல்ல என்றும் அவர் சட்டப்படி தண்டிக்கப் பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. மேலும் பல இடங்களில் அவர் மீது புகார் அளிக்கப் பட்டு வருகின்றன.

இதனை அடுத்து எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...