அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்கம் உள்ளிட்ட அதிரடி பரிசுகள்!

ஏப்ரல் 22, 2018 693

தஞ்சை (22 ஏப் 2018): தஞ்சை அருகே உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்கப் படும் மாணவர்களுக்கு தங்கம், பணம் ஆகிய பரிசுகள் வழங்கி ஊக்கப் படுத்தப் பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாகவும் அதனை ஊக்குவிக்கும் விதமாகவும், தஞ்சை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்தாண்டு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோர்களுக்கு ரூ.1000 ஊக்கப்பரிசும் வழங்கி வருகின்றனர்.

இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக பெற்றோர்-ஆசிரியர் கழகம் முடிவு செய்தது. அதன்படி பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வரை சேர்ந்த 15 மாணவர்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயமும், மாணவர்களின் பெற்றோர்களுக்கு ரூ.1000 ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டது. நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பில் பள்ளியில் சேர்ந்த 15 மாணவர்களுக்கு தங்க நாணயம், மற்றும் பெற்றோர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இதையொட்டி பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் பிரகலாதன், தலைமை ஆசிரியர் வாசுகி , கிராம மக்கள், கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...