எஸ்.வி.சேகர் மீது மேலும் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு!

ஏப்ரல் 23, 2018 653

கரூர் (23 ஏப் 2018): நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது மேலும் 7 பிரிவுகளின் கீழ் கரூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் போடப்பட்டிருந்த பதிவை, எஸ்.வி.சேகர் பகிர்ந்தார். அது சமூக வலைதளங்களில் பேசும் பொருளானது. இதனால் வெகுண்டெழுந்த பத்திரிகையாளர்களும் பெண்கள் அமைப்புகளும் எஸ்.வி.சேகருக்கு எதிராகக் கொந்தளிக்க, அவரும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கேட்டார். இதுதொடர்பாக அவர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், நெல்லை நீதிமன்றத்திலும் அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் முயற்சியில் தலித் பாண்டியன் என்பவர் எஸ்.வி.சேகருக்கு எதிராக 7 பிரிவுகளின்கீழ் கரூர் ஜே.எம்-2 கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட ஜே.எம்-2 கோர்ட் நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதி ஒத்தி வைத்துள்ளார். எஸ்.வி.சேகர்மீது வழக்கு தொடுத்துள்ள தலித் பாண்டியன், ஏற்கெனவே நாச்சியார் படத்தில் இடம்பெற்றிருந்த வசனம் தொடர்பாக இயக்குநர் பாலா மற்றும் நடிகை ஜோதிகாமீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்.

இதுகுறித்து தலித் பாண்டியனிடமே பேசினோம்."எஸ்.வி.சேகருக்கு இதே வேலையாக இருக்கிறது. தமிழ்நாட்டுப் பெண்களை இழிவுபடுத்தும் அவரது போக்கு கண்டிக்கத்தக்கது. அவரது வரம்பற்ற எல்லைமீறிய பேச்சுக்குத் தடை போட வேண்டும். அதற்காகவே, பத்திரிகையாளர்களின் வழிகாட்டுதலோடு, வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மூலம் ஜே.எம்-2 கோர்ட்டில் எஸ்.வி.சேகர் மீது 7 பிரிவுகளில் வழக்கு போட்டுள்ளேன். தமிழக பெண் பத்திரிகையாளர்களைக் கீழ்த்தரமாகச் சித்திரித்த அவருக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்" என்றார். அ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...