கமல் கட்சியில் அதிர்ச்சி - முக்கிய பிரபலம் விலகல்!

April 24, 2018

சென்னை (24 ஏப் 2018) கமலின் மக்கள் மய்யம் கட்சியிலிருந்து முக்கிய பிரபலம் வழக்கறிஞர் ராஜசேகர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை சமீபத்தில் தொடங்கினார். அவரது கட்சியின் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடந்தன. எனினும் சமீபத்திய தமிழக பிரச்சனைகளில் கட்சி பொதுவில் இறங்கி போராட்டங்கள் எதையும் முன்னெடுத்து நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் திடீரென விலகியுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், அதனால் அந்த கட்சியில் இருந்து விலகியதாகவும் வழக்கறிஞர் ராஜசேகர் கூறியுள்ளார். கட்சி தொடங்கிய ஒருசில மாதங்களிலேயே முக்கிய பிரபலம் ஒருவர் கட்சியில் இருந்து விலகியுள்ளது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!