மது அருந்திவிட்டு மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவர்!

ஏப்ரல் 25, 2018 815

சென்னை (25 ஏப் 2018): சென்னையில் மது அருந்திவிட்டு போதையில் மனைவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி, சிவகாமி அம்மை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர் (50). இவரது மனைவி முபாரக் பேகம் (44), அப்துல் ஜபார் மதுப்பழக்கம் உடையவர். இதனால் வேலைக்கும் செல்வதில்லை.

இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்துள்ளார் ஜாபர். அப்போது கணவருக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு மனைவி தூங்கி விட்டார். அப்போது திடீரென மனவியின் தலையில் அம்மிக்கல்லை எடுத்து அவர் மீது வீசியுள்ளார், இதனால் தலையிலும், மார்பிலும் பலத்த காயம் அடைந்த முபாரக் பேகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

மனைவியைக் கொலை செய்து விட்டு ஜாபர் தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தவர் போலீஸாருக்கு புகார் கொடுத்தனர். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு வந்த எம்.கே.பி நகர் போலீஸார் முபாரக் பேகம் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு பதுங்கியிருந்த அப்துல் ஜாபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...