திவாகரனுக்கு உடம்பு சரியில்லை - தினகரன் சொல்கிறார்!

ஏப்ரல் 26, 2018 625

கும்பகோணம் (26 ஏப் 2018): திவாகரன் உடல் நிலை சரியில்லாததால் அவர் கண்டபடி உளறுகிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "மாநில அரசின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால் தங்களது சொந்த நலனுக்காகவே மத்திய அரசுடன் அ.தி.மு.க அரசு இணக்கமாக இருந்து வருகிறது. மேலும் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது வேடிக்கையானது. ஏனென்றால் இடைத்தேர்தலில் கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

திவாகரன் எடப்பாடிக்கு ஆதரவாக பேசி வருவது, என்னை தாக்கி அவதூறாக விமர்சிப்பதன்மூலம் அவர் உடல் நலம் குன்றி உளறி கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. இதனை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம். வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பது அவருடைய விருப்பம். இதில் நான் கருத்து கூற ஒன்றும் இல்லை." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...