புனேவுக்கு சுற்றுலா சென்ற சென்னை மாணவர்கள் பலி!

ஏப்ரல் 26, 2018 625

புனே (26 ஏப் 2018): புனேவுக்கு சுற்றுலா சென்ற சென்னை பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை-எண்ணூர் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பள்ளியில் படித்த 20 மாணவர்களை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று புனேவுக்கு கல்வி சுற்றுலா அழைத்து சென்றது. இவர்கள் புனேவிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேப்டர் கிராமத்தில் 'முல்சி' அணை உள்ளது. இந்த அணையில் மாணவர்கள் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கினர். சந்தோஷ் (13), சரவணக்குமார் (13), தானிஷ் (13) ஆகிய மூன்று மாணவர்களும் அணையில் மூழ்கினர். அவர்களை ஆசிரியர்கள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் காப்பாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. மாணவர்கள் அணையில் மூழ்கியது குறித்து புனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அணையில் மீட்பு படையினருடன் தேடினர். அதில் சந்தோஷ் உடல் மட் டும் கிடைத்தது. மாயமான மற்ற இரண்டு மாணவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...