அவசரம் இன்ற ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளுங்கள்!

ஏப்ரல் 27, 2018 2677

சென்னை (27 ஏப் 2018): வங்கிகளுக்கு நாளை சனிக்கிழமை முதல் மூன்று தினங்கள் விடுமுறை என்பதால் இன்றே ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளவும்.

நாளை இம்மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் நாளையும், நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை தினமாகும். மேலும் வரும் 30ஆம் தேதி புத்த பூர்ணிமா காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளுக்கும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை என்பதால், அவசரமாக பணம் தேவைப்படும் பொதுமக்கள் ஏடிஎம்களில் முன்னதாகவே பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

விடுமுறை காரணமாக இந்த மூன்று நாட்களிலும் எந்தவித பரிவர்த்தனைகளும் நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்று(ஏப்-27) வங்கி முழுநாளும் செயல்படும் என்றும் அவசர பணத்தேவை, அலுவல்களை இன்று முடித்துக் கொள்ளலாம் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...