திருமணம் ஆன அன்றே புது மணப் பெண் தற்கொலை!

ஏப்ரல் 27, 2018 1534

வேலூர் (27 ஏப் 2018): வாணியம்பாடியில் திருமணம் நடந்த அன்றே புது மணப் பெண் தற்கொலை செய்டு கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் மருத்துவர் காலனியை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகள் மீனா (வயது 20). இவருக்கும், வாணியம்பாடி அடுத்த குரிசிலாப்பட்டை சேர்ந்த சின்னசாமி மகன் கோவிந்தராஜ் (25) என்ற நாதஸ்வர கலைஞருக்கும், நேற்று முன்தினம் மணமகன் வீட்டில் பந்தல் அமைத்து, திருமணம் நடந்தது.

இந்நிலையில் மணமகன் வீட்டில் இருந்த மீனா அதே பகுதியில் உள்ள உறவினர் யுவராஜ் என்பவர் வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லை. அங்கு மீனா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தேடி குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, தூக்கில் மீனா பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார், விரைந்து வந்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து புதுப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...