பெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து சிக்கிக் கொண்ட டாகடர்!

ஏப்ரல் 28, 2018 1050

சென்னை (28 ஏப் 2018): சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு டாக்டர் சிகிச்சைக்காக வரும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து சிக்கிக் கொண்டார்.

திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த, 29 வயது பெண், நேற்று முன்தினம், மயிலாப்பூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, பெண்ணை, அவரது தாய், மயிலாப்பூர், ரூதர்புரத்தில் உள்ள, ஆர்.எம்., கிளினிக் என்ற, தனியார் மருத்துவமனைக்கு, அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர் சிவகுருநாதனிடம், அப்பெண் சிகிச்சைக்கு சென்றார். உடல் பாதிப்பு குறித்து, டாக்டரிடம், அப்பெண் கூறினார். அப் பெண்ணுடன் வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு, பெண்ணை பரிசோதிக்க, ஒரு தனி அறைக்கு, மருத்துவர் அழைத்துச் சென்றார்.அங்கு, அப்பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பது போல் நடித்து, டாக்டர் தனது அங்கு மறைத்து வைத்திருந்த மொபைல் போனில், பெண்ணை ஆபாசமாக படம் பிடித்தார்.

இதை அறிந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இதை அறிந்த உறவினர்கள் டாக்டரை அடித்து உதைத்தனர். மேலும் அவரது மொபைல் போனை ஆய்வு செய்த போது, சிகிச்சைக்கு வந்த இளம்பெண்கள் பலரை, ஆடைகளை களைந்து, ஆபாசமாக படம் பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, டாக்டரை, போலீசார் கைது செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...