தாம்பரத்தில் சுமார் 15 கடைகள் எரிந்து சாம்பல்!

ஏப்ரல் 28, 2018 722

சென்னை (28 ஏப் 2018): சென்னை தாம்பரத்தில் சுமார் 15 கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

தாம்பரம் சண்முகா சாலையில் உள்ள மார்க்கெட் பகுதியில் பாரதி திடல் என்ற இடத்தில் பழங்கள், வளையல் கடை, காய்கறி கடை, துணிக்கடை என 20க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. அங்கு நள்ளிரவில் 12 மணிக்க தீப்பிடித்தது.

தீ மளமளவென பற்றி எறிந்ததால் பதற்றம் உருவானது. தீயணைப்பு வீரர்கள் பெரும் போரட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...