நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஏப்ரல் 28, 2018 787

சென்னை (28 ஏப் 2018): நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூட சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டா் தொலையில் அமைந்துள்ள மதுக்கடைகளை ஏப்ரல் 2017 முதல் மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தமிழக அரசு நெடுஞ்சாலைகளின் பெயர்களை ஊரக சாலைகளாக மாற்றம் செய்து மதுக்கடைகளை மீண்டும் திறந்தது.

இதனை எதிர்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைகளின் பெயரை ஊரக சாலைகளாக மாற்றம் செய்யாமல் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சாலையின் பெயரை நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...