பாஜக தான் என் மீது கல் வீசியது - வை.கோ திட்டவட்டம்!

ஏப்ரல் 29, 2018 763

நெல்லை (29 ஏப் 2018): ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பாஜக கைகூலிகள் தான் என் மீது கல் வீசினர் என்று வைகோ திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

வை.கோவின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன் மீது கல்வீசியது பா.ஜ., கைக்கூலிகள் என வைகோ பேசி உள்ளார். அவர் வார்த்தையை அளந்து பேச வேண்டும். என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தன்மீது கல்வீசியது தொடர்பான கருத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மதவாத கட்சிகள் காலுன்ற கூடாது என்பதற்காகவே திமுகவுக்கு ஆதரவளிப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...