மதுரை இந்தியன் வங்கியில் ரூ 10 லட்சம் கொள்ளை!

மே 01, 2018 542

மதுரை (01 மே 2018): மதுரை இந்தியன் வங்கியில் ரூ 10 லட்சம் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது.

மதுரை கிழக்கு ஆவணி மூலவீதியில் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகமும், கிளை அலுவலகமும் உள்ளது. முதல் தளத்தில் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கான பிரிவுபசார விழா 4-வது மாடியில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஊழியர்கள் அனைவரும் சென்றிருந்தனர். காசாளர் சக்திகணேஷ் என்பவரும் கேபினை பூட்டி விட்டு சென்று விட்டார்.

இந்தநிலையில் யாரோ மர்மநபர் வங்கிக்குள் புகுந்தார். கேபினுக்கு மேல் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு இடைவெளி இருந்தது. அதற்குள் சாமர்த்தியமாக நுழைந்த அவர் பணப்பெட்டியில் இந்த 10 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து சென்று விட்டான். வங்கி காசாளர் பணி முடிந்த நேரத்தில் கணக்கு பார்த்த போது ரூ.10 லட்சம் குறைந்தது. இதையடுத்து வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்த்தபோது, அதில் மர்ம நபர் வங்கிக்குள் நுழைவதும், பணத்தை திருடுவதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக வங்கி மேலாளர் சீனிவாசன் விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்தியன் வங்கியின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...