முத்தம் கொடுத்தால் மார்க் போடுவேன் - இவர் வேற லெவல் பேராசிரியர்!

மே 02, 2018 865

கோவை (02 மே 2018): ஐந்து முத்தம் கொடுத்தால் ஒரு மார்க் போடுவேன் என்று கோவையில் பேராசிரியர் ஒருவர் மாணவியை மிரட்டியுள்ளார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பேராசிரியராக இருப்பவர் பிலிப். இவர் ஒரு மாணவியிடம் முத்தம் கொடுத்தால் மார்க் போடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஒருவழியாக தப்பித்தார். கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த விவகாரத்தில் கைதான பேராசிரியர் ஜாமீனில் வெளி வந்ததோடு, பலகலை கழகம் அமைத்த விசாரணைக் குழுவையும் சரிகட்டி அதிலும் மீண்டு விட்டதாக கூறப் படுகிறது.

அருப்புக் கோட்டை நிர்மலா தேவி விவகாரம் வெளி வந்த பிறகு பல பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் இதுப்போன்ற சம்பவங்கள் தொடர்வதாகவே பலரும் கருதுகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...