அதிராம்பட்டினம் டாக்டர் ஜெஸிமுக்கு சிறந்த குடிமகன் விருது!

மே 03, 2018 820

தஞ்சை (03 மே 2018): தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது ஜெஸிம் என்பவருக்கு இந்திய அரசு, "சிறந்த குடிமகன்" விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் டாக்டர் முஹம்மது ஜெஸிம். இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது திறமையைப் பாராட்டி, ஏற்கனவே பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உடல் சத்து மற்றும் மருத்துவ ஆராய்சி குறித்த இவரது பங்களிப்பிற்காக பெங்களூரில் இந்திய அரசு சார்பில், சிறந்த குடிமகன் விருது மற்றும் பதக்கம் வழங்கப் பட்டது.

இவருடன் சேர்ந்து ஏழுபேருக்கு இத்தகைய விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...