ஸ்டாலினை சந்தித்த பாஜக எம்பி!

மே 05, 2018 708

சென்னை (05 மே 2018): சென்னையில் பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா மற்றும் முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலினை சந்தித்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் பங்கேற்பதற்காக யஷ்வந்த் சின்ஹா, பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். அவர்கள் இருவரும் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் மு.க.ஸ்டாலினுடன் நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். முன்னதாக இவ்விருவரும் வை.கோவையும் சந்தித்து பேசினர்.

பின்பு இதுகுறித்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பாஜக ஆட்சியை வீழ்த்துவது குறித்துபேசினோம்’’என்றார். சத்ருஹன் சின்ஹா இன்றுவரை பாஜகவில் உள்ளார். அதேவேளை யஷ்வந்த் சின்ஹா கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...