அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை!

மே 05, 2018 689

வேலூர் (05 மே 2018): வேலூர் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகேந்திரன் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வேலை விஷயமாக மகேந்திரன் இன்று வந்தார். அப்போது அலுவலகத்துக்குள் வந்த மர்ம நபர்கள் மகேந்திரனை வெட்டிப் படுகொலை செய்தனர்.

விஷயமறிந்து சம்பவ இட்த்திற்கு விரைந்த போலீஸார், மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த படுகொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...