பெண்களுடன் உல்லாசம் - வீடியோவுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி!

மே 06, 2018 4012

நெல்லை (06 மே 2018): பல பெண்களை மயக்கி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்ததோடு, அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பர விட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் சீர்மிகு காவல் நிலையத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருபவர் நடராஜன். குடும்ப பிரச்சனை காரணமாக காவல் நிலையத்திற்கு வரும் பெண்களுக்கு வலை விரித்து, அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து சென்று நடராஜன் அவர்களுடன் தவறாக இருந்துள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சிலர் சமயம் பார்த்து அவரின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். அவர் கதவை திறந்தவுடன் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது, அரைகுறை ஆடையுடன் அவர் இருக்க, அப்பெண்ணே நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார். இதைக்கண்டு கொதிப்படைந்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் தப்பிக்காத வண்ணம் மடக்கிப்பிடித்து வீட்டிற்குள் அமர வைத்தனர். இந்த சம்பவத்தை சிலர் வீடியோவும் எடுத்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அதன்பின் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, இருவரையும் அவர்களிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவ விட்ட ஐந்து பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...