எல்லோரும் மறந்து போன ஒரு வழக்கை கை விட்டது சிபிஐ!

மே 07, 2018 960

கோவை (07 மே 2018): கிட்டத்தட்ட எல்லோரும் மறந்து போன டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை கை விடுவதாக சிபிஐ அறிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியன்று திருச்செங்கோடு காவல்துறையினர் குடியிருப்பில் தனது அறையில் தூக்கில் தொங்கியபடி டிஎஸ்பி விஷ்ணுபிரியா சடலமாக மீட்கப்பட்டார்.அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுபிரியா உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இந்நிலையில்
டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலைதான், கொலையல்ல என்று கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...