நீட் தேர்வு பாதிப்பால் தொடர்ந்து மூன்று தமிழர்கள் மரணம்!

மே 07, 2018 707

சென்னை (07 மே 2018): நீட் தேர்வுக்காக கடந்த 2 நாட்களில் தொடர்ந்து மூன்று பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வெழுதச்சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்பவரின் தந்தை கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனை அடுத்து சிவகங்கை சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன், மதுரை பசுமலையில் தேர்வெழுதி விட்டு மகள் ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வரும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இப்போது பண்ருட்டியை சேர்ந்த மாணவி ஸ்வாதியுடன் தேர்வு மையத்துக்கு சென்ற தந்தை சீனிவாசன் நெஞ்சு வலியால் இறந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...