நோன்பு கஞ்சிக்காக மசூதிகளுக்கு அரிசி வழங்க முதல்வர் உத்தரவு!

May 10, 2018

சென்னை (10 மே 2018): ரமலானை முன்னிட்டு நோன்புக் கஞ்சிக்கு அரிசி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த மாதம், இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளிலிருந்து வருடந்தோறும் அரசு சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள 3000 மசூதிகளுக்கு, சுமார் 5 ஆயிரத்து 145 டன் அளவிலான அரிசியை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Search!