நீதியரசர் ராஜிந்தர் சச்சாருக்கு தமுமுக சார்பில் நினைவேந்தல்!

மே 12, 2018 521

சென்னை (12 மே 2018): மறைந்த நீதியரசர் ராஜிந்தர் சச்சாருக்கு தமுமுக சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

மறைந்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ராஜிந்தர் சிங் சச்சார், 1985 ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் டிசம்பர் 22 ம் தேதிவரை அவர் டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். ஓய்வுக்குப் பின்னர் குடிமையுரிமைச் செயற்பாடுகளில் அவர் பங்கெடுக்கத் தொடங்கினார். மக்கள் சிவில் உரிமைக் கழகம்- பியுசிஎல் அமைப்பில் நீண்ட காலம் செயலாற்றி வந்தார்.

முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில், இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைமை குறித்து ஆய்வுசெய்து அறிக்கைதருவதற்காக நீதிபதி சச்சார் நியமிக்கப்பட்டார். 2006 நவம்பரில் நாடாளுமன்றத்தில் 403 பக்கங்களைக் கொண்ட அக்குழுவின் அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. சச்சார் குழு அறிக்கை என அறியப்படும் அவ்வறிக்கையானது, `இந்தியாவில் பட்டியல் சமூகத்தினரைவிட மோசமான வாழ்நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தது, நாடளவில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.

ராஜிந்தர் சச்சாரின் மறைவு முஸ்லிம்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு நினைவேந்த நிகழ்ச்சி 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சி மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக, தி.க தலைவர் கி.வீரமணி, நீதியரசர் கே. சந்துரு, நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி, முனைவர் வி.சுரேஷ், வழக்கறிஞர் ஹென்றி டிபேன் ஆகியோர் பங்கேற்று சிரப்புரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியை பேராசிரியர் ஹாஜாகனி தொகுத்து வழங்கினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...