வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பியவர் கைது!

May 12, 2018

சென்னை (12 மே 2018): குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப் மூலம் தவறான தகவலைப் பரப்பிய கட்டிடத் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகள் கடத்தப் படுவதாக வாட்ஸ் அப்பில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் கடந்த 9-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தம்புகொட்டான்பாறை கிராமத்தில் காரில் வந்த 5 பேரை குழந்தைக் கடத்தல் கும்பல் என்று சந்தேகித்து சரமாரியாக தாக்கினர். அதில், சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி(65) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, சமூகவலைதளத்தில் குழந்தைக் கடத்தல் குறித்து தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட எஸ்பி பொன்னி ஆகியோர் நேற்று முன் தினம் எச்சரித்தனர். அதன் அடிப்படையில் குழந்தைக் கடத்தல் குறித்து வாட்ஸ்-அப் மூலம் தவறான தகவலைப் பரப்பியதாக. கட்டிடத் தொழிலாளியை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!