கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற இருவர் கைது!

மே 13, 2018 681

சென்னை (13 மே 2018): கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ய முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

21 வயது கல்லூரி மாணவி 7ம் தேதி இரவு, கிண்டியில் இருந்து போரூர் நோக்கி, ஷேர் ஆட்டோவில் பயணித்தார். மணப்பாக்கம், டி.எல்.எப்., சந்திப்பில், பிற பயணியர் இறங்கிய நிலையில், ஆட்டோ ஓட்டுனருடன், அவரது நண்பர் மற்றும், மாணவி பயணித்துள்ளார்.முகலிவாக்கம் அருகே, ஆட்டோ ஓட்டுனர், தன் நண்பருடன் சேர்ந்து, மாணவியிடம் ஆபாசமாக பேசி, ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தி உள்ளார். பயந்து போன மாணவி, போலீசுக்கு போன் செய்வதாக கூறியதால், ஆத்திரமடைந்த இருவரும், அவரை தாக்கி உள்ளனர்.போரூர் சிக்னல் வழியாக, வளசரவாக்கம் நோக்கிச் செல்ல, வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, ஆட்டோவில் இருந்து குதித்து, மாணவிதப்பினார்.

மேலும் இது குறித்து, தன் தந்தைக்கு, போனில் தெரிவித்த மாணவி, கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்கு பதிந்த கிண்டி போலீசார், போரூர், கொசப்பேட்டையைச் சேர்ந்த, ஆட்டோ ஓட்டுனர், ஜனார்த்தனன், 27, அவரது நண்பரான பவீன், 25, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...