கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்திருப்பது குறித்து ஸ்டாலின் கருத்து!

மே 18, 2018 693

சென்னை (18 மே 2018): கர்நாடகாவில் எதிர் கட்சிகள் பெரும்பான்மை பெற்றிருந்த போதிலும் பாஜகவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்திருப்பது ஜனநாயக படுகொலை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

கர்நாடக மாநில கவர்னர், தேர்தலுக்கு பிறகு அமைந்துள்ள காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அவசரமாக அழைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, நமது ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசை பாதுகாக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சிகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...