பிள்ளைகள் முன்பு கணவரால் மனைவி படுகொலை!

மே 18, 2018 690

சேலம் (18 மே 2018): சேலம் அருகே பிள்ளைகள் முன்பு மனைவியின் தலையில் கல்லை துக்கிப் போட்டு கணவர் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சரவணன் குடிபோதையில் இருந்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வழக்கம்போல் குடும்ப தகராறு முற்றியது. இதில், சரவணன் மனைவி பரமேஸ்வரி தலையின் மீது கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை கண்கூடாக பார்த்து இரண்டு குழந்தைகளும் கதறி அழுதனர்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...