மெரினாவில் வைகோ, தெஹ்லான் பாக்கவி, திருமுருகன் காந்தி பேரணி!

மே 20, 2018 737

சென்னை (20 மே 2018): இலங்கையில் போரின் போது உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்காக வைகோ, தெஹ்லான் பாக்கவி, திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மெரினாவில் திரண்டனர்.

மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மெரினாவில் கூடினர். ஆனால் காவல்துறையினர் பேரணி மற்றும் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி மறுத்து சாலையை தடுப்புகள் வைத்து அடைத்தனர்.

எனினும் காவல்துறையினரின் தடையை மீறி ஆயிரக்கணக்கணோர் மெரினா கடற்கரையை நோக்கி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணி செல்ல முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...