ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி!

மே 22, 2018 899

தூத்துக்குடி (22 மே 2018): தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று இந்த போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து போராட்டத்தின்போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர் பெயர், விவரம் தெரியவில்லை.

மேலும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து ஆட்சியர் அலுவலகம் தீ வைக்கப் பட்டுள்ளது. இதனால் அங்கு மேலும் பதற்றம் நிலவுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...