கொலை களமான தூத்துக்குடி - போலீஸ் வேட்டைக்கு 10 பேர் பலி!

மே 22, 2018 866

தூத்துக்குடி (22 மே 2018): தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 10 பேரை போலீஸ் சுட்டுக் கொன்றதால் தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த துப்பாக்கிசூட்டில் மேட்டுப்பட்டி கிளாஸ்ட்ன (40), தூத்துக்குடி கந்தையா (55), குறுக்குசாலை கிராமம் தமிழரசன்(28), ஆசிரியர் காலனி சண்முகம் (40), தாமோதர் நகர் மணிராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 17 வயது மாணவி வெனிஸ்டா உயிரிழந்துள்ளார். வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் மாணவி வெனிஸ்டா உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது இல்லை. இவ்விவகாரம் தமிழகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொல்லப்பட்டவர்களின் உடல்கள் நாளை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...