தூத்துக்குடி டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்!

மே 22, 2018 602

சென்னை (22 மே 2018): தூத்துக்க்குடி சம்பவத்துக்கு காரணமான டிஜிபி ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறையாக மாறியது. இதனை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 65 பேர் கல்வீச்சில் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையியல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், துப்பாக்கிச்சூடு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறினார். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

மேலும் அமைச்சர்கள் குழுவும், முதலமைச்சரும் உடனடியாக தூத்துக்குடி செல்ல வேண்டும் என்று கூறினார். மேலும் டிஜிபி ராஜேந்திரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். புதிய டிஜிபியின் கீழ் தூத்துக்குடியில் சகஜ நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...