தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உண்மையில் பலியானோர் எத்தனை பேர்?

மே 23, 2018 772

தூத்துக்குடி (23 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் கணக்கு அதிகம் இருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் கடந்த 100 நாட்களாக அமைதி வழியில் போராடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியானதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்று அஞ்சப் படுகிறது.

தமிழகத்தில் இப்படி ஒரு தாக்குதல் இதுவரை நடந்ததில்லை என்னும் அளவுக்கு தமிழகமே கொதித்துப் போய் உள்ளது. இந்த தாக்குதலை கண்டித்து தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...