தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகை மீது வழக்கு!

மே 24, 2018 703

சென்னை (24 மே 2018): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் எதிர்த்துப் பேசிய டி.வி. நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சன் டிவியின் தென்றல் தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை நிலானி, இவர் என் இனிய தோழி, பைரவி உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அவர் படப்பிடிப்பில் போலீஸ் உடையில் இருந்தபோது அரசையும்,போலீசையும் கண்டித்து வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பரவ விட்டிருந்தார். ஆனால் சமூக வலைதளங்களில் ஒரு போலீஸ் அதிகாரிதான் இவ்வாறு பேசுவதாக பொதுமக்களிடையே நம்பப் பட்டது.

இந்த பேச்சு குறித்து ரிஷி என்பவர் வடபழனி போலீசில் புகார் அளிட்துள்ளார். அதன் அடிப்படையில் நடிகை நிலானி மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...