இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்!

மே 25, 2018 857

சென்னை (25 மே 2018): வங்கி ஊழியர்கள் சங்கம் ஊதிய உயர்வு கோரி, வருகிற மே 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.

மும்பையில் ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 5ம் தேதி நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இந்திய வங்கிகள் வழக்கத்திற்கு மாறான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் இளநிலை மற்றும் நடுநிலை அதிகாரிகளுக்கு மட்டுமே சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், 2 சதவீதம் தான் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் வங்கி நிர்வாகங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர். மேலும் இதற்கு முன்னரே ஊதிய உயர்வுக்கான கோரிக்கையை கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதியே சமர்ப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அதற்கான ஒப்பந்தம் போடப்படவில்லை என்றும் வங்கி ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

இதன்படி வரும் புதன் மற்றும் வியாழன்கிழமைகளில் வங்கிப் பணிகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்களுடன் தனியார் மற்றும் பன்னாட்டு வங்கி ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...