ஜவாஹிருல்லா, கனிமொழி, திருமாவளவன் கைது!

மே 25, 2018 972

சென்னை (25 மே 2018): தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 20,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூட்டை நடத்தியதால் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் இன்று மாநில அளவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன. அதன் அடிப்படையில் தமிழகம் எங்கும் கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், திராவிடர் கழகம், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் MH.ஜவாஹிருல்லா மற்றும் கனிமொழி திருமாவளவன் NR தனபாலன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

முன்னதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...