தமிழக அரசு உடனடியாக இன்றுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மே 25, 2018 795

மதுரை (25 மே 2018): மூன்று மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கியது ஏன்? என்று இன்று பிற்பகல் 3 மணிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இணைய சேவை 5 தினங்களுக்கு முடக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் இணைய சேவை முடக்கப் பட்டுள்ளதால் தூத்துக்குடி தவிர பிற மாவட்டங்களில் ஏடிஎம், இதர தொழில்துறை மற்றும் கல்வித்துறை ஆகியவை பாதிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து பொது நல மனு ஒன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் இன்று பிற்பகல் 3 மணிக்குள் தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...