ஐந்து வீடுகளில் ஒருவருக்கு கேன்சர் - ஸ்டெர்லைட் பயங்கரம்!

மே 27, 2018 741

தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையே உலுக்கிய சம்பவம் கடந்த வார தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் கடந்த 100 நாட்களாக அமைதி வழியில் போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் 100 வது நாள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்று அஞ்சப் படுகிறது.

தமிழகத்தில் இப்படி ஒரு தாக்குதல் இதுவரை நடந்ததில்லை என்னும் அளவுக்கு தமிழகமே கொதித்துப் போய் உள்ளது. இந்த தாக்குதலை கண்டித்து தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் போராட்டத்தில் பலியானவர்களில் ஒருவர்தான் 18 வயதான ஸ்னோலின். தன் தாயுடன் போராட்டக் களத்திற்கு சென்ற அவர் துப்பாக்கிச்சூட்டில் வாயில் சுடப்பட்டு உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அவரது தாய் கண்ணீருடன் தெரிவிக்கையில்," என் மகள் என்ன குற்றம் செய்தாள்? அவளை ஏன் குறி வைத்து கொல்ல வேண்டும்?. என் மருமகளும், மகனும் போராட்டக் களத்தில் இருந்தார்கள் அங்கே துப்பாக்கிச் சூடு என கேள்விப் பட்டு நானும் என் மகளும் பதறியடித்துக் கொண்டு அங்கு சென்றோம் ஆனால் அருகில் இருந்த என் மகள் வாயில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்த்து. மூளை வெளியே சிதறியவாறு சம்பவ இடத்திலேயே என் மகள் இறந்தாள்.

எங்கள் உயிர் எத்தனை போனாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம். எங்கள் ஊரில் ஐந்து வீடுகளுக்கு ஒருவருக்கு கேன்சர் நோய் உள்ளது. இதெற்கெல்லாம் முக்கிய காரணம் இந்த ஸ்டெர்லைட் ஆலைதான். சமீபத்தில் மிக குறைந்த வயது இளைஞன் கேன்சர் பாதிப்பில் இறந்தான். பலருக்கு அது உள்ளுக்குள் உள்ளது. ஏதேனும் பாதிப்பு வந்தால் மருத்துவரிடம் செல்வார்கள் அப்போதுதான் அவர்கள் கேன்சர் பாதிக்கப் பட்டுள்ளது கண்டுபிடிக்கப் படுகிறது. எனவே உயிரைக் கொல்லும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்க விடமாட்டோம்" என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...