தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை!

May 28, 2018

தூத்துக்குடி (28 மே 2018): தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை செயல்படத் தொடங்கியது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் ஒருபகுதியாக பொதுமக்கள் பேரணியாக சென்றபோது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பாட மோதலை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். தற்போது ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இதற்கிடையே, காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) டி.கே ராஜேந்திரன் நேற்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நள்ளிரவு முதல் இணைய சேவை மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், தூத்துக்குடியில் முடக்கப்பட்ட இணைய சேவை நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் வழங்கப்பட்டது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!