ஸ்டெர்லைட் ஆலை அபராதம் ரூ 100 கோடி என்ன ஆனது? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

மே 28, 2018 740

புதுடெல்லி (28 மே 2018): ஸ்டெர்லைட் ஆலை அபராத தொகை ரூ 100 கோடி என்ன ஆனது? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கோடைக் காலங்களில் இரண்டு சிறப்பு அமர்வுகள் மட்டுமே செயல்பட்டுவருகின்றன. அதிலும், தவிர்க்க முடியாத வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுவருகிறது. எனவே, இந்த வழக்கை இப்போது எடுத்து விசாரிக்க முடியாது. கோடைக் காலம் முடிவடைந்த பிறகே இதைப் பற்றி முழுமையாக விசாரிக்க முடியும் எனக் கூறி, அடுத்த வாரத்துக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், விதிமீறல் என்று ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை தமிழக அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அதைச் சார்ந்த தேவைகளுக்குப் பயன்படுத்தியதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த வாரம் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...