ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடல் - சீல் வைத்தார் மாவட்ட ஆட்சியர்!

மே 28, 2018 975

சென்னை (28 மே 2018): ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 13 பேர் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. தூத்துக்குடியில் அமைதி திரும்ப பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தது. இருப்பினும் நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதே எங்கள் கோரிக்கை என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனை அடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை முடுவதாக அரசாணை வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்டதற்கான நோட்டீஸை ஆலையின் வெளிப்புறக் கதவில் அவர்கள் ஒட்டினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...