தூத்துக்குடி சம்பவத்துக்கு ஐ.நா. கண்டனம்!

ஜூன் 01, 2018 630

தூத்துக்குடி (01 ஜூன் 2018): தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு அரசாணையின் பேரில் ஸ்டெர்லைட் ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மனித உரிமை, சுற்றுச்சூழலுக்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணையை காலதாமதமின்றி நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...