ரஜினியின் அடுத்த ட்வீட்!

ஜூன் 01, 2018 660

சென்னை (01 ஜூன் 2018): செய்தியாளர்களை மிரட்டும் தொனியில் பேசிய ரஜினி வருத்தம் தெரிவித்து டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் பாதிக்கப் பட்டவர்களை சந்திக்க சென்ற ரஜினியை யார் நீ? என்று ஒருவர் கேட்டது ரஜினியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே வேகத்தில் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பதில் அளித்த ரஜினி செய்தியாளர்களை யே என்று ஒருமையில் பேசினார்.

இதனால் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினி, "விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...