ப. சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்!

ஜூன் 01, 2018 432

புதுடெல்லி (01 ஜூன் 2018): ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குகில் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதி வழங்கியதற்குக் கைம்மாறாக அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு மூன்றரைக் கோடி ரூபாய் பணம் செலுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் விசாரணைக்காக ஆஜராகுமாறு ப.சிதம்பரத்துக்கு நேற்று சிபிஐ சம்மன் அனுப்பியது.

முன்னதாக ப.சிதம்பரத்தை, ஜூலை 3-ம் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...