நான் ஸ்டாலின் பேசுகிறேன் - லைவில் நெகிழ வைத்த ஸ்டாலின்!

ஜூன் 02, 2018 651

திருவாரூர் (02 ஜூன் 2018): திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், இந்த விழா பாராட்டுவதற்காக எடுக்கப்படும் விழா அல்ல. திராவிட இயக்கத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக் காத்து, எங்களிடம் ஒப்படைத்துள்ளதால் எடுக்கப்படும் விழா.

இங்கு பேசிய அனைவரும், எங்களுக்கும் அவர் தான் தலைவர் என்று குறிப்பிட காரணம் சமூக நீதியை கட்டிக்காத்ததுடன், மத நல்லிணக்கத்தை பேணியவர் கலைஞர் என்பதால்தான் என்றார். இந்த விழாவை வீட்டிலிருந்தபடியே டிவியில் லைவ்வாக ஒளிபரப்பப்பட்டதை கருணாநிதி பார்த்து மகிழ்ந்தார்.

ஸ்டாலின் நேற்று பேசும்போது கருணாநிதி பார்த்துக் கொண்டிருக்கிறார் எனக் கூறிவிட்டு நான் ஸ்டாலின் பேசுகிறேன்... கேட்கிறதா என சில நிமிடங்கள் உருக்கமாக பேசினார். அப்போது அரங்கமே அதிர்ந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...