11 ஆம் வகுப்பில் சாதித்த இரட்டை சகோதரர்கள்!

ஜூன் 02, 2018 892

அதிராம்பட்டினம் (02 ஜூன் 2018): இஸ்லாமிய கல்வியிலும், உலக கல்வியிலும் ஒரு சேர சாதித்துள்ளனர் அதிரையை சேர்ந்த இரட்டை சகோதரர்கள்.

அதிராம்பட்டினத்தை சேர்ந்த சலீம் இவரின் மகன்கள் எம்.எஸ் முஹம்மது சஹல், எம்.எஸ். அஹமது சுஹைல். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவர்கள் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாருல் இக்லாஸ் அரபிக் கல்லூரியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

நடந்து முடிந்த அரசு பொதுத் தேர்வில் இருவரும் பள்ளின் அளவில் முதல் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் இவ்விருவரும் இஸ்லாமிய மார்க்கக் கல்வியிலும் சாதித்துக் கொண்டிருப்பவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...