வயதானால் கவர்ச்சி காட்டக் கூடாதா?: கஸ்தூரி விளக்கம்!

ஜூன் 03, 2018 1233

சென்னை (03 ஜூன் 2018): வயதானால் கவர்ச்சி காட்டக் கூடாதா என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழப்பியுள்ளார்.

இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் 2.0. படத்தின் டீசர் நேற்று வெளியானது. மேடையில் நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி நடனம் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் கஸ்தூரியை ட்விட்டரில் பின் தொடரும் ரசிகர் ஒருவர் கஸ்தூரியிடம் ”தாயான பிறகு கவர்ச்சி நடனம் ஆடுவது சரியா’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கஸ்தூரி “இத்தகைய வழக்கமான தமிழ் மனநிலைதான் மாற வேண்டும் என நான் விரும்புகிறேன். கவர்ச்சியாக இருக்கும் பெண் அறிவுடையவளாக இருக்க மாட்டாள். அவள் தாய்மைக்குத் தகுந்தவள் அல்ல. அவள் நன்மதிப்புகளையும் கொண்டிருக்க மாட்டாள் என்றெல்லாம் வகுத்துவைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எப்போதாவது ஏதாவது ஒரு நடிகரைப் பார்த்து, நீங்கள் ஏன் மதுபோதையில் இருப்பதுபோல் நடிக்கிறீர்கள், ஏன் கவர்ச்சியான பாடல்களுக்கு நடனமாடுகிறீர்கள், ஏன் காதல் காட்சிகளில் நடிக்கிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறோமா?” எனப் பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...