67 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு!

June 04, 2018

சென்னை (04 ஜூன் 2018): எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டு நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து வரும் சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய அரசு பரிசீலனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்ட பிரிவு 161-ன்படி, மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் அரசாணைகள் மூலம் நெறிமுறைகள் குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 25-ம் தேதியுடன், 10 ஆண்டுகள் தண்டனைகாலம் நிறைவுசெய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 பேர் முன்விடுதலை செய்யப்படுவதாகவும் அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Search!