சோக பூமியில் நடிகர் விஜய்!

ஜூன் 06, 2018 630

தூத்துக்குடி (06 ஜூன் 2018): தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் அளித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...